Nayanthara : விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் தான் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் டிடி என்று அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளை டிடி தான் தொகுத்து வழங்குவார். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி இருக்கிறார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்களை டிடி பேட்டி எடுப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இவ்வாறு சினிமா துறையில் டிடியின் நட்பு வட்டாரம் மிகப்பெரியது. இந்நிலையில் டிடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது.
பிரபல நடிகையை பேட்டி எடுத்த போது டிடி அணிந்த கலரில் தான் நடிகையும் உடைய அணிந்திருந்தாராம். இதனால் டிடி-யை உடைமாற்ற சொன்னதாக கூறியிருந்தார். ஆனால் டிடி தன்னுடைய டிரஸ்ஸை மாற்ற முடியாது என்று கூறிவிட்டாராம்.
நயன்தாராவை பற்றி பேசிய டிடி
ஆனாலும் டிடி நடிகையிடம் நன்றாக தான் பேட்டி எடுத்ததாக கூறியிருந்தார். இந்த சூழலில் நயன்தாராவை தான் டிடி மறைமுகமாக கூறியிருந்தார் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் நயன்தாராவை ட்ரோல் செய்து வந்தனர்.
இதுகுறித்து டிடி முதல்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார். அதாவது நான் அந்த பேட்டியில் பேசியது நயன்தாராவை பற்றி இல்லை. யாரும் அவரை தவறாக பேச வேண்டாம் என்று டிடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் டிடி இப்போது இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியதால் நயன்தாரா மீது தப்பில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அப்போது என்றால் டிடி பேசியது எந்த நடிகை என்று இப்போது நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.