டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோப்ரா. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
மேலும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகள் போட்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் ரிலீஸுக்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கோப்ரா படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் கோப்ரா படத்திற்கு கலவையான விமர்சனங்களை வந்து சேர்ந்தது. அதாவது கோப்ரா படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வுற்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனாலும் விக்ரம் படம் எதிர்பார்த்ததை விட அதிக திரையரங்குகளில் வெளியானதால் முதல் நாளில் வசூல் வேட்டையாடி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 12 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் 2 கோடி, ஆந்திராவில் 4 கோடி, கர்நாடகாவில் 3.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கோப்ரா படம் முதல் நாளில் 25 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
கடும் விமர்சனங்கள் தாண்டி கோப்ரா படம் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனாலும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கோப்ரா படம் ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.