கர்ணன் படத்தை முடித்த கையோடு தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரஸ்ஸோ பிரதேர்ஸ் இயக்கத்தில் த கிரே மேன்(the gray man) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் தனுஷ் அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கர்ணன் படம் கூட அவர் ஹாலிவுட் படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் வெளியானது. கர்ணன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெற்றி விழா ஆகிய இரண்டிலுமே தனுஷ் கலந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் இந்த இரண்டு விழாக்களிலும் அமெரிக்காவிலிருந்து வீடியோகால் மூலம் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தனுசுக்கு ஹாலிவுட் ஒன்றும் புதியதல்ல.
ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால் தற்போது கொரானா பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் அமெரிக்காவில் சோலோவாக தங்க முடியாது என தன்னுடைய குடும்பத்தையும் அழைத்து சென்று விட்டார்.
தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகிய இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் போட்டே வருடம் ஆகிறது. அந்த வகையில் இந்த முறை குடும்பத்துடன் அமெரிக்காவில் சம்மரை கொண்டாடிவரும் தனுஷ் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதிலும் நடுக்கடலில் நின்று கொண்டு தன்னுடைய மனைவியை போஸ் கொடுக்கச் சொல்லி தனுஷ் புகைப்படம் எடுப்பது போல் வெளிவந்த போட்டோ ஒன்று இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.
