5 வயசுல தான் அண்ணன் தம்பி, அப்புறம் பங்காளி.. ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், செல்வராகவன்

சினிமா குடும்பத்தில் பிறந்தவர்களான செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். தனுஷ் இந்த உயரத்தை அடைய செல்வராகவன் முக்கிய காரணம். ஏனென்றால் தனது தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனராக மட்டுமே பணியாற்றி வந்த செல்வராகவன் சமீபகாலமாக நடிகனாகவும் படங்களில் கலக்கி வருகிறார். இப்போது அவர் கதாநாயகனாக பகாசூரன் என்ற படத்தில் நடித்து உள்ளார். மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நடராஜ், ராதா ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர், பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது. மோகன் ஜியின் முந்தைய படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பகாசூரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்போது செல்வராகவன் படத்துக்கு போட்டியாக தனுஷின் வாத்தி படமும் வெளியாகிறது. அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷின் வாத்தி படம் உருவாகியுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வாத்தி படத்தை வெளியிட உள்ளனர்.

தனுஷின் முந்தைய படங்கள் தொடர் தோல்வியை தழுவி வரும் நிலையில் வாத்தி படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும் என எதிர்பார்த்த நிலையில் தனுஷுக்கு போட்டியாக அவரது அண்ணனின் பகாசூரன் படம் வெளியாவது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.

ஆகையால் ஒரே நாளில் அண்ணன், தம்பி இருவரும் மோதிக் கொள்வதால் யார் படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதிக்காக தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றி படங்கள் கொடுத்த நிலையில் இந்த இரு படமும் இவர்களுக்கு வெற்றி கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.