மாமனாரை ஓரங்கட்டிய மருமகன்.. விஜய், அஜித் செய்யாததை செய்து ரஜினியை தலை நிமிரச் செய்த தனுஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படம் 1930 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்படுவதால் தத்ரூபமாக அப்போது உள்ளது போல செட்டு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் தயாரிப்பாளர் மிகுந்த பொருட்செலவில் இந்த படத்தை எடுத்து வருகிறார்.

மேலும் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதால் தனுஷ் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளாராம். பொதுவாக ரஜினி தோல்வி படம் கொடுத்தால் தன்னுடைய அடுத்த படத்தின் சம்பளத்தில் சற்று குறைத்துக் கொள்வார். இப்போதும் ஜெயிலர் படத்தில் தனது சம்பளத்தை ரஜினி குறைத்துள்ளார்.

ஆனால் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வருகிறார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் இவர்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யவும் தயாராக உள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் நலன் கருதி விஜய், அஜித் செய்யாத விஷயத்தை தற்போது தனுஷ் செய்துள்ளார்.

அதாவது கேப்டன் மில்லர் படத்திற்காக தயாரிப்பாளர் மிகுந்த சிரமப்பட்ட படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதால் தனது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொண்டு உள்ளார் தனுஷ். மேலும் 40 கோடியில் இருந்து 20 கோடி குறைத்துள்ளாராம். நடிகர்கள் சம்பளத்தில் பாதியை குறைப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இந்த விஷயத்தில் ரஜினியை ஓரம் கட்டியுள்ளார் தனுஷ். மேலும் ஒரு மருமகனாக ரஜினியை தலை நிமிர செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவியதால் தனுஷை சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.