சொந்த செலவில் சூனியம் வைத்ததால் சைக்கிளுக்கு கூட வழியில்லாத அப்பா.. அவமானப்பட்டு அசுர வளர்ச்சி அடைந்த தனுஷ்

தனுஷ் தமிழில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் அளவிற்கு வளர்ந்து உச்சத்திற்கு சென்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு இவர் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை தாண்டி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக வைத்திருந்தார். இப்பொழுது முன்னணி நடிகராக வந்திருந்தாலும் இவர் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். அதை அப்பாவிடம் கேட்டபோது அதற்கு அவர் முதலில் நீ தேர்வை சரியாக எழுதி பாஸ் பண்ணு. அப்படி பாஸ் பண்ணின பிறகு நான், நீ ஆசைப்பட்ட மாதிரி சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏனென்றால் அந்த நேரத்தில் கஸ்தூரிராஜா சொந்தமாக ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்ததால் மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அந்த கஷ்டத்தை தனுஷிடம் காட்டக் கூடாது என்பதற்காக இவருடைய அப்பா அந்த மாதிரி ஒரு கண்டிஷனை போட்டு தனுஷை சமாளித்திருக்கிறார்.

ஆனால் அந்த சைக்கிள் விலை 1500 ரூபாய் மட்டுமே. அதை கூட வாங்கிக் கொடுக்காத நிலையில் அப்பொழுது அவருடைய குடும்பம் இருந்திருக்கிறது. அதை நினைத்து தனுஷ் அப்போது மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். பின்பு வாங்கி தராத காரணத்தை தெரிந்து கொண்ட தனுஷ் இந்த நிலைமையே மாற்றி தன் அப்பாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

அதை மனதில் வைத்துக் கொண்டு தான் சினிமாவில் நடிக்க வந்தார். அப்படி அவர் நடித்த முதல் படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் இதனைத் தொடர்ந்து பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது ஒரு முன்னணி நடிகராக வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்பொழுது யாரும் நினைக்காத வகையில் 150 கோடிக்கு மிகப்பெரிய பிரமாண்டமான வீட்டை கட்டியுள்ளார். இவரை மாதிரி எந்த ஒரு நடிகரும் இந்த அளவுக்கு அவமானங்களை சந்தித்தது இல்லை. அப்படியே இருந்தாலும் இதையெல்லாம் மனதில் வைராக்கியத்துடன் எடுத்துக்கொண்டு இந்த வயதில் உயர்ந்தது இல்லை.

தமிழ் சினிமாவில் இவருடைய வளர்ச்சி, நிறைய அவமானங்களை சந்தித்து முன்னேற முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக இவர் வளர்ந்து நிற்கிறார். இவருடைய வளர்ச்சி சாதாரணமாக அமைந்ததில்லை. இவருக்கு கிடைத்த அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இப்பொழுது அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.