புருஷன் சரியில்லைன்னா உடனே டைவர்ஸ் தான்.. அதிர்ச்சியை கிளப்பிய தனுஷின் மாமியார்

Actor Dhanush: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்த நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த அடுத்த படங்களிலும் தனுஷ் கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் கணவர் சரியில்லை என்றால் உடனே விவாகரத்து செய்து விடுவது தான் நல்லது என்று தனுஷ் பட மாமியார் கூறியது தான் இப்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதாவது தனுஷ் சேட்டை செய்யும் விதமாக நிறைய படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அந்த வகையில் ஹன்சிகா மோத்வானி உடன் தனுஷ் நடித்த படம் தான் மாப்பிள்ளை.

இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியின் அம்மாவாக நடித்தவர் பிரபல நடிகை மனிஷா கொய்ராலா. இதில் ஹன்சிகாவை காட்டிலும் தனுஷ் மற்றும் மனிஷா கொய்ராலா இடையே தான் நிறைய காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இவர்கள் இடையே நடக்கும் போட்டா போட்டி தான் படத்தின் மைய கதையாக இருந்தது.

இந்த சூழலில் மனுஷா கொய்ராலா சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு நேபாளைச் சேர்ந்த தொழிலதிபரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாராம்.

ஆனாலும் இப்போது என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நான் மகிழ்ச்சி ஆக இருந்து வருகிறேன். மேலும் உண்மையில் சொல்லப் போனால் பெண்களுக்கு திருமண வாழ்க்கை சரி இல்லை என்று நினைத்தால் உடனே அதிலிருந்து வந்து விடுங்கள். மேலும் விவாகரத்து பெற்று பிரிவது தான் நல்லது.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக போனால் பிரச்சனை தான் பெரிதாக போகும். ஆகையால் இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைப்பது விவாகரத்து தான் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார் மனிஷா கொய்ராலா. இந்த செய்தி தான் இப்போது பயங்கரமாக பரவி வருகிறது.