கதை இல்லாமல் கூட படம் எடுத்துவிடுவார். ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டார் இயக்குனர் செல்வராகவன். அப்படிதான் தன்னுடைய தம்பியின் ஆரம்ப கால படங்களை எல்லாம் இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்து அவரை தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கி தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்தில், தனுஷுடன் ஸ்நேகா சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.
இந்த படத்தில் நடிக்கும்போது செல்வராகவன் எப்படி நடித்து காட்டுகிறாரோ, அப்படியே அதை இமிடேட் செய்து நடித்தாராம் தனுஷ். செல்வராகவன் நடித்த 10% தான் படத்தில் தனுஷ் நடித்திருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் புதுப்பேட்டை படத்தில் அவருக்கு நடிக்க சுத்தமா விருப்பம் இல்லையாம். சுள்ளான் மாதிரி இருக்கும் என்னை டான் என்கிறீர்கள். அந்த டானுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் எதிரிகளை அளிப்பான் என்று ஒல்லியாக இருக்கும் எனக்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுக்கிறீர்கள் என்று புதுப்பேட்டை படத்தில் நடிக்க தனுஷ் மறுத்திருக்கிறார்.
அப்போது செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய பாலகுமாரன் அவர்கள் தனுஷின் அழைத்து, எதற்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை என சொல்கிறாய். சினிமா துறையில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறாயா! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் தம்மாத்துண்டு இருப்பவர்கள் தான் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தனுஷுக்கு தைரியம் கொடுத்திருக்கிறார்.
தொடக்கத்தில் அவரது தோற்றத்தைக் குறித்து மனம் குன்றியிருந்த தனுஷ், அதன் பிறகு எப்படிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து விடலாம் என்ற தைரியம் அவருக்கு வந்திருக்கிறது என்றால் ஆரம்ப காலங்களில் அவர் கற்றுக்கொண்ட பாடம் தான், இப்போது இந்திய சினிமாவையே கலக்கும் அளவுக்கு மாற்றியிருக்கிறது.
மேலும் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல்களும் சமீபத்தில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இவரது இந்த பேட்டிக்கு பிறகு அந்தப் படத்தின் 2ம் பாகம் விரைவில்ல் உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.