செகண்ட் பார்ட்டா பயந்து ஓடும் தனுஷ்.. முன் அனுபவத்தால் எடுத்த முடிவு

Actor Dhanush: தனுசுக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் பழையபடி அவர் ஒரு தரமான ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் உருவாகி இருக்கிறது.

இந்த படம் தீபாவளி ரிலீசுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது பொங்கல் பண்டிகைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இப்போது முடிந்துவிட்ட நிலையில் மொத்த படத்தையும் பார்த்தால் கிட்டதட்ட 5.30 மணி நேரம் இருக்கிறதாம். இதனால் எடிட்டிங்கில் நிறைய காட்சிகள் கட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இயக்குனர் தனுஷிடம் கேப்டன் மில்லர் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் தனுஷ் வேண்டவே வேண்டாம் என தான் எடுத்த முடிவில் திட்டவட்டமாக இருக்கிறாராம். இதற்கெல்லாம் காரணம் அவருடைய முன் அனுபவம் தான் என தனுஷ் சுற்று வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஏனென்றால் ஏற்கனவே தனுஷ் லயன் அப்பில் புதுப்பேட்டை 2, நானே வருவேன் 2, வடசென்னை 2 போன்ற படங்கள் இன்னும் எடுக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக தனுஷின் மாரி 2 மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 படங்கள் வெளியாகி பிளாப் ஆகிவிட்டது.

மேலும் சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்து விட்டது. எனவே ரஜினியை போலவே அவரது மருமகன் தனுஷுக்கும் இரண்டாம் பாகத்தில் இப்போது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

அதுவும் தனுசுக்கு சுத்தமாகவே இரண்டாம் பாகத்தில் ராசி இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கேப்டன் மில்லர் படத்தில் நிறைய காட்சி எடுக்கப்பட்டுள்ளதால் எதை எடுப்பது என்ற குழப்பத்தில் எடிட்டர் இருக்கிறாராம். இப்போது அதற்கான பணி தான் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.