Dhanush : தனுஷ் இப்போது இட்லிகடை படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்துடன் இந்த படம் வெளியாக இருந்த நிலையில் இப்போது ரிலீஸை தள்ளி போட்டுள்ளனர். இதனிடையே தனுஷ் நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
போயஸ் கார்டனில் இடம் வாங்கி பங்களா கட்டியதில் தனுஷுக்கு எக்கச்சக்க செலவாகி இருக்கிறது. இதனால் பல தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் கொடுத்த நிலையில் இரவு பகல் பார்க்காமல் படங்களில் நடித்து வருகிறார்.
அது தவிர டைரக்ஷனிலும் இறங்கி வேலை செய்கிறார். பல மொழி படங்களில் பிசியாக இருக்கும் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். கால்ஷீட் கொடுத்ததால் தன்னுடைய படத்தில் சீக்கிரம் நடிக்க வேண்டும் என்று குடைச்சல் கொடுக்கின்றனர்.
இயக்குனருக்கு உதவிய தனுஷ்
இவ்வாறு நிதி நெருக்கடியில் இருந்தாலும் தன்னுடைய இயக்குனருக்கு தனுஷ் உதவி இருக்கிறார். அதாவது தனுஷ் பட இயக்குனர் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கான மருத்துவ செலவு மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கு மேலாகும்.
இயக்குனரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் பலரிடம் உதவி கேட்டிருக்கின்றனர். யாருமே உதவ முன் வராத நிலையில் கடைசியாக தனுஷின் கதவை தட்டி பார்த்திருக்கின்றனர். உடனடியாகவே தனுஷ் தனது கிரிடிட் கார்டை கொடுத்து விட்டாராம்.
எவ்வளவு மருத்துவ செலவு ஆனாலும் இதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் இயக்குனர்களுக்கு இவ்வாறு உதவுவார்களா என்பது சந்தேகம் தான்.
ஆனால் தனுஷ் தான் கஷ்டத்தில் இருக்கும் போதும் இயக்குனருக்கு உதவியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.