தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களது கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதேபோல் தற்போது தனுசுடன் ஏற்கனவே மூன்று படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஒருவர் நான்காவது முறையாக தனுஷுடன் உள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இதில் யாரடி நீ மோகினி படத்தை தவிர மற்ற இரண்டுமே தோல்விப் படங்கள்தான்.
உத்தமபுத்திரன் படத்தில் விவேக் காமெடி மட்டுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக மித்ரன் ஜவஹர் தனுஷ் வாய்ப்பு கொடுத்துள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக D44 என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த கூட்டணி அமைப்பதில் ரசிகர்களுக்கு பெரிய உடன்பாடு இல்லை என்பதைப் போலவே தெரிகிறது.
இந்த படத்தில் நாயகிகளாக 3 பேர் நடிக்க உள்ளார்களாம். இளம் நடிகைகளை சிபாரிசு செய்து வருகிறார்களாம்.