தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க முதல் சாய்ஸாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் டாப் ஹீரோவாகவும் வில்லனாகவும் சரிசமமாக தன்னுடைய கேரியரை பேலன்ஸ் செய்து வருகிறார்.
இது சினிமா வரலாற்றில் அறிய ஒன்று. எல்லோரும் மார்க்கெட் இல்லாத சமயத்தில் வில்லனாக நடித்து அதன் மூலம் கிடைக்கும் வரவேற்பை வைத்து பின்னர் ஹீரோவாக நடித்து ஓரளவு தங்களுடைய கேரியரை தக்க வைத்துக் கொள்வார்கள்.
அப்படித்தான் அருண்விஜய்க்கு நடந்தது. ஆனால் விஜய் சேதுபதி முற்றிலும் வித்தியாசம். ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதுவும் முன்னணி நடிகர்களின் படங்களில்.
இதுவும் ஒரு வியாபார உத்திதான். முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் பேசப்படும் போது அடுத்ததாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் வெளியானால் அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என்பதுதான்.
ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இனி வருங்காலத்தில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதே பேட்டியில் தனுஷுடன் மாரி 2 படத்தில் டோவினோ தோமஸ் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் பின்னர் படக்குழு மறுத்ததாகவும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
