வசூல் மழையில் நனைந்த நானே வருவேன் தயாரிப்பாளர்.. மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்த நானே வருவேன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சில விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தன்னுடைய நடிப்பின் மற்றொரு கோணத்தை காட்டியிருக்கும் தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். வித்தியாசமான கதையும், நடிப்பும் தான் தற்போது இப்படத்தை பாராட்ட வைத்துள்ளது. இதனாலேயே இந்த திரைப்படம் தற்போது வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படம் வெளியான மறுநாளே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதனால் நானே வருவேன் திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என்ற ஒரு கணிப்பும் இருந்தது. ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில் இந்த திரைப்படம் தற்போது நல்ல லாபத்தை பார்த்து வருகிறது.

இதனால் இப்படத்தை தயாரித்துள்ள கலைப்புலி எஸ் தாணு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதனால் அவர் இந்த கூட்டணியை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் தாணுவின் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார்.

முழுக்க முழுக்க ஆக்சன் கலந்து கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கும் அந்த படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். கூடிய விரைவில் இந்த திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

மேலும் இப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருப்பதால் புதுப்பேட்டை திரைப்படத்தை போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.