தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அப்படம் கலெக்ஷனை பெறவில்லை.
அதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் படத்தில் நடித்தது தான் நான் செய்த பெரிய தவறு என்று நடிகர் போஸ் வெங்கட் கூறியுள்ளார். சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமான போஸ் வெங்கட் தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வில்லன், கேரக்டர் ரோல் என்று அனைத்து கேரக்டர்களிலும் கலக்கி கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் தனுசுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை பார்த்த அவருடைய மனைவி சோனியா தன் கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுதாராம்.
இதனால் பதறிப் போன போஸ் வெங்கட் அவரிடம் காரணம் கேட்டிருக்கிறார். அதற்கு சோனியா சிவாஜி படத்துல நீங்க நடிச்ச கேரக்டர் போலவே இந்த மாறன் பட கதாபாத்திரமும் இருக்கிறது. அப்படி என்றால் நீங்க சினிமாவில் முன்னேறவில்லையா அல்லது கதையை நீங்கள் கேட்டு முடிவு செய்யவில்லையா என்று சோகமாக கேட்டாராம்.
அதாவது இந்த படத்தில் போஸ் வெங்கட்டுக்கு சரியான முக்கியத்துவம் இல்லை என்று அவர் வருத்தப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தில் போஸ் வெங்கட் பல கசப்பான அனுபவங்களை சந்தித்ததாகவும், எதற்காக இந்த படத்தில் நடித்தோம் என்று இப்போது வரை வருத்தப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் தனுஷ் மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் கிடையாது. உண்மையில் மாறன் திரைப்படத்தில் இருந்த அனைவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் தான். ஆனாலும் எனக்கு அதில் நடித்தது வருத்தத்தை கொடுத்துள்ளது. சினிமாவில் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் மாறன் திரைப்படம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.