ஏத்திவிட்ட ஏணியவே பதம் பார்த்த தனுஷ்.. பயங்கர அப்செட்டில் இருக்கும் இயக்குனர்

தனுஷ் ரொம்ப பிஸியாக கோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் ஹிட் அடித்ததால் அவர் மார்க்கெட்டும் எங்கேயோ போய்விட்டது. இப்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி படத்தில் நடித்து முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகும் வாத்தி படத்திற்கு போட்டியாக தனுஷின் குரு நடித்த படமும் ரிலீஸ் ஆகிறது. இதனால் ஏத்திவிட்ட ஏணியவே தனுஷ் பதம் பார்க்கிறாரா என்றும் சோசியல் மீடியாவில் பலரும் விமர்சிக்கின்றனர். ஏனென்றால் தனுஷ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும்போது அவருக்கு பக்க பலமாக இருந்து தூக்கி விட்டவர் அவருடைய அண்ணன் செல்வராகவன்.

சினிமாவிற்கு தனுஷ் வந்த சமயத்தில் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததுடன் உருவ கேலிக்கும் ஆளானார். இருப்பினும் பார்க்க பார்க்க பிடித்து விடும் என்ற பழமொழியை இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்தே உண்மை என்பதை நிரூபித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதே இளமை, காதல் கொண்டேன் அதன் பிறகு புதுப்பேட்டை போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தையும் பெற்று தந்தது. இப்படி கோலிவுட்டில் அசைக்க முடியாத நட்சத்திரமாக மாறிய தனுஷ் தற்போது அண்ணனுக்கே போட்டியாக நிற்கிறார்.

சமீப காலமாகவே செல்வராகவன் இயக்குவதை விட நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இப்பொழுது அவர் ஒரு நடிகனாக வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனக்கு கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களை செம்மையாக நடித்து கைத்தட்டல்களை வாங்குகிறார் செல்வராகவன். தனுஷை அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன் தான்.

இன்று தனுஷ் அவரையும் தாண்டி ஒரு நடிப்பு அரக்கனாக மாறிவிட்டார். செல்வராகவன் கேரக்டர் ரோல் மட்டுமே செய்கிறார். மோகன். ஜி இயக்கத்தில் பகாசூரன்  என்ற படத்தின் மூலம் செல்வராகவன்  ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்நிலையில் தனுஷின் வாத்தி மற்றும் செல்வ ராகவனின் பகாசூரன்  இரண்டு படங்களும் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரஇருக்கிறது. தனுஷிற்கு மட்டுமே பெரிய வரவேற்பு இருக்கிறது.