தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை சென்றதே பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக ஹாலிவுட்டில் கால் பதித்து விட்டார்.
ஏற்கனவே தனுஷ் த எக்ஸ்ஆர்டின்ரி ஜர்னி ஆப் தி பகிர்(The Extraordinary Journey of the Fakir) என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை உலகப்புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரசோ பிரதர்ஸ் இயக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் புகழ் கேப்டன் அமெரிக்கா ஸ்டீவ் ரோஜர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அமெரிக்காவில் பரபரப்பாக நடைபெற்று வந்த த கிரே மேன் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் எப்போது தமிழ்நாடு திரும்பி தமிழ் படங்களில் நடிப்பார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் கோலிசோடா உடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனுஷ் பார்ப்பதற்கு செம ஸ்டைலிஸ் ஆக உள்ளார்.
நெட்ப்ளிக்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த படத்திற்கு பிறகு ஹாலிவுட் சினிமாவிலும் தனுஷ் முத்திரை பதிப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.
