பணத்தாசை பிடித்தவரா தனுஷ்.? இயக்குனருக்கு செய்த மாபெரும் உதவி, அந்த மனசு தான் சார்

Dhanush: அந்த மனசு தான் சார் கடவுள் என அன்பே சிவம் படத்தில் கமல் சொல்வார். அது எந்த அளவுக்கு உண்மை என ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து தெரிந்து கொள்கிறோம்.

கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சாங்க என சொல்வதுண்டு. அப்படித்தான் தனுஷ் தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனருக்கு சத்தம் இல்லாமல் ஒரு மாபெரும் உதவியை செய்து இருக்கிறார்.

தனுஷ் படத்தை இயக்கிய டைரக்டர் ஒருவர் கிட்னி பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 25 லட்சம் அளவுக்கு ஹாஸ்பிடல் பில் வந்திருக்கிறது.

இவ்வளவு தொகையை கட்ட முடியாத அவருடைய குடும்பத்தினர் எங்கெங்கோ உதவி கேட்டு போயிருக்கிறார்கள். இறுதியில் தனுஷிடம் கேட்போம் என அவரிடம் நிலையை சொல்லி உதவி கேட்டிருக்கிறார்கள்.

பணத்தாசை பிடித்தவரா தனுஷ்.?

உடனே அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய கார்டை எடுத்து கொடுத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஸ்வைப் செய்து கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார். இதன் மூலம் இயக்குனர் பெரும் பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தான் இது. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது. வேறு எந்த ஹீரோவும் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தனுஷ் மனிதாபிமானம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என நிரூபித்து விட்டார். அப்படிப்பட்டவரை பணத்தாசை பிடித்தவர் என வெற்றிமாறன் சிம்பு பட விவகாரத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

உண்மையில் தனுஷ் இது போல் பலருக்கு உதவி செய்திருக்கிறார். ஆனால் அதை அவர் வெளியில் காட்டிக் கொண்டது கிடையாது. சிலர் எந்த உதவி செய்தாலும் உடனே பகிரங்கப்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் தனுஷ் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறார். அது புரியாமல் அவரை நோகடிக்கும் விதமாக நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வருகிறது என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.