தனுஷ் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தெலுங்கு திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர் வரிசையாக தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதில் அவர் நடிப்பில் உருவான ஒரு படம் வெளியிட முடியாமல் தவித்து வருகிறது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி உள்ளது. பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியிடலாமா அல்லது புத்தாண்டுக்கு வெளியிடலாமா என படகுழு தீவிர ஆலோசனையில் இருந்தது.
ஆனால் இப்போது வாத்தி டீம் டிசம்பரும் வேண்டாம், ஜனவரியும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் வரும் டிசம்பர் 16ஆம் தேதி தான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் அவதார் திரைப்படம் வெளிவருகிறது.
ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி வசூலையும் விருதுகளையும் எக்கச்சக்கமாக வாரி குவித்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதத்தில் அடுத்தடுத்து வெளியான ட்ரெய்லர்களும் அனைவரையும் பிரம்மிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
மேலும் படத்தின் இயக்குனர் இந்த படம் ஓடவில்லை என்றால் அவதார் படம் இனிமேல் கிடையாது என்று கூறினார். ஏனென்றால் இப்படம் ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கிறது. இதிலிருந்தே இந்த படத்தின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை என்று தெரிகிறது. இதனாலேயே இந்த படத்தோடு போட்டி போட எந்த நடிகர்களும் முன் வரவில்லை.
அந்த வகையில் தனுஷின் வாத்தி திரைப்படமும் தற்போது பின்வாங்கி இருக்கிறது. ஜனவரியிலும் வாரிசு, துணிவு போன்ற திரைப்படங்கள் போட்டிக்கு இருப்பதால் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. அதனால் வசூல் பயத்தில் வாத்தி திரைப்படம் இந்த ரேசிலிருந்து பின்வாங்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.