Actor Dhanush: தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளியான வாத்தி திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இதற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு மொத்தமாக மாறி உள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அத்துடன் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள். அடுத்ததாக இப்படத்தின் டீசர் குறித்து படக்குழு அப்டேட்டுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த அப்டேட் செய்தியை அறிவித்தபோது கோலிவுட்டியே அதிர வைத்த சம்பவமாக மாறி உள்ளது. அதற்கு காரணம் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் இவருக்கு போட்டியாக களமிறங்க வேண்டும் என்பதற்காக தனுஷ் அவருடைய கேப்டன் மில்லர் படத்தின் டீசரை அதே நாளில் வெளியிட இருக்கிறார். அதாவது ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை டம்மியாக்க வேண்டும் என்பதுதான் தனுஷ் எடுத்திருக்கும் புதிய ஆயுதம். அவருடைய கேப்டன் மில்லர் படத்தை தூக்கி நிறுத்தி இவர் யார் என்று சூப்பர் ஸ்டாருக்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்.
இவருடைய எக்ஸ் மாமனாரை பழி வாங்குவதற்காக சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் சூப்பர் ஸ்டாராக இருப்பவரை போட்டியாக நினைத்திருக்க வேண்டாம். அத்துடன் ஜெயிலர் படத்துடன் போட்டி போட்டு இவருடைய கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியிட்டு விழாவை நடத்தி வந்தால் இவருக்கு கெத்தாக இருக்கும்.
அத்துடன் இவருடைய படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம் என்ற நோக்கில் புதுவிதமாக ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். ஏற்கனவே இப்படித்தான் மாமன்னன் மற்றும் லியோ படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மோதிக்கொண்டது. ஆனால் கடைசியில் லியோ தான் ஜெயித்தது. அந்த வகையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் மோதிக்கொள்ள போகிறது. இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.