Dhanush : தனுஷ் இப்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு படங்களில் பிஸியாக இருக்கிறார். இப்போது அவரது லைனில் இட்லி கடை மற்றும் குபேரா ஆகிய படங்கள் இருக்கிறது. அடுத்ததாக மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த சூழலில் தனுஷின் குபேரா படம் பெரும் தொகைக்கு ஓடிடியில் விற்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் தனுஷ் வாத்தி படத்தில் நடித்த நிலையில் அது படுமோசமான தோல்வியை சந்தித்தது. மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி விற்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு தனுஷ் படத்திற்கும் பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.
ஓடிடிக்கு விற்கப்பட்ட தனுஷின் குபேரா படம்
இந்த சூழலில் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் குபேரா படத்தை கிட்டத்தட்ட 50 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாம். தனுஷ் முன்னதாக இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சரியாக போகவில்லை.
அதன் பிறகு அவர் இயக்கி, நடிக்கும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இட்லி கடை படம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் வெளியாக இருந்தது.
ஆனால் போட்டியை தவிர்ப்பதற்காக இட்லி கடை ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. இந்த சமயத்தில் தனுஷுக்கு ஜாக்பாட் அடித்தது போல் குபேரா படம் நல்ல வியாபாரம் ஆகி இருக்கிறது. மேலும் தனுஷ் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.