தனுஷின் ரீல் அண்ணன் விஜய் சேதுபதிக்கு செய்த துரோகம்.. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை

தமிழ் சினிமாவில் தனுஷ் நுழையும்போது ஏகப்பட்ட உருவ கேலிகளுக்கு ஆளானார். ஆனால் அவருடைய அண்ணன் செல்வராகவன் மற்றும் தந்தை கஸ்தூரிராஜா ஆகிய இருவரும் பக்க பலனாக இருந்ததனால் தான் தனக்கு நேர்ந்த அவமானத்தை எல்லாம் தனுஷ் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

‘பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’ அப்படித்தான் முதலில் தனுஷை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளத் தயங்கி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெளியான திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் பக்கத்து வீட்டு பையன் போல் ரொம்பவே எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதிலும் திருடா திருடி படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்த கிருஷ்ணாவை பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் எல்லா ஹீரோக்களுக்கும் பெஸ்ட் பிரண்டாக இவர் தான் இருப்பார். நிறைய படங்களில் இப்பொழுது பார்க்கலாம். பைவ் ஸ்டார் படத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகும் இளங்கோ கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆனார்.

அதன் பிறகு தான் தனுஷ் உடன் திருடா திருடி படத்தில் வாசுவின் அண்ணன் கேரக்டரில் நடித்திருப்பார். அதன்பின் ஆட்டோகிராப், ஆயுத எழுத்து, அறிந்தும் அறியாமலும், சரவணா, பட்டியல், ஆதி என இவர் நடித்த படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் இவர் ஒரு அட்வர்டைஸ்மென்ட் பிசினஸ் கம்பெனி நடத்தி வருகிறார்.

படத்தில் நடிப்பதால் இவருடைய சொந்த பிசினஸுக்கு சில கஷ்டங்கள் ஏற்பட்டது. அதனால் படத்தில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய நிஜ பெயரான கிருஷ்ணா என்ற பெயரிலேயே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். இவர் நிறைய படங்களில் பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகருக்கான விருதை வாங்கிய உள்ளார்.

கவண், ஆரம்பம், சரவணா போன்ற படங்களில் தவிர்க்க முடியாத நடிகராகவே திகழ்ந்தார். அதிலும் கவண் படத்தில் இவர் விஜய் சேதுபதி கூட வேலை பார்த்துட்டு அவருக்கு துரோகம் செய்வார். இந்த கேரக்டரில் நடித்த அவருக்கு நல்ல ஒரு ரீச் கிடைத்தது, பட வாய்ப்புகளும் குவிந்தது. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதையா இப்போது பிசினஸுக்காக கிருஷ்ணா நல்ல நல்ல பட வாய்ப்புகளை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.