பகாசூரனை விட 10 மடங்கிற்கு மேல் வசூல் செய்த வாத்தி.. தலையை சுற்றி வைத்த முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான வாத்தி படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தனுஷ் படத்திற்கு போட்டியாக அவரது அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவான பகாசூரன் படமும் வெளியாகி இருந்தது.

வாத்தி மற்றும் பகாசூரன் இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது. தனுஷ் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. ஆகையால் வாத்தி படத்தின் மீது முழு நம்பிக்கையுடன் தனுஷ் இருந்தார்.

ஆனால் வாத்தி படமும் அவரை காலை வாரி விட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு வாடகையில் எடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் ரசிகர்களை கவர தவற விட்டுள்ளது. இந்நிலையில் வாத்தி படம் முதல் நாளில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 8 கோடி கலெக்ஷன் செய்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் இப்படம் 14 கோடியில் இருந்து 15 கோடி வசூல் செய்து உள்ளது. அதுவே செல்வராகவன் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் என்ற படத்தில் நடித்திருந்தார். மோகன் ஜி யின் முந்தைய படங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் அதற்கு நேர் எதிராக பகாசூரன் படம் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. எதிர்பார்ப்புடன் போனவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் மோகன் ஜி. இதனால் முதல் நாளில் செல்வராகவனின் பகாசூரன் ஒரு கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் தொடர்ந்து வாத்தி மற்றும் பகாசூரன் படங்களுக்கு மோசமான விமர்சனங்களை வருவதால் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடும். தயாரிப்பாளர் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை எடுப்பாரா என்பதே சந்தேகம் தான். இதனால் தனுஷின் கேரியரில் மிகப்பெரிய சருக்களை வாத்தி படம் ஏற்படுத்தி உள்ளது.