பைசனுக்கு பின் துருவின் மிரட்டல் கூட்டணி.. அப்பா 8 அடினா குட்டி 16 அடி

சியான் விக்ரமின் மகனாக திரையுலகில் அறிமுகமான துருவ் தனது முதல் படமான ஆதித்ய வர்மா மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு மகான் போன்ற படங்களில் தனது சக்தி வாய்ந்த நடிப்பால் ரசிகர்களை மெய் மறக்க வைத்தார்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துருவ் விக்ரம் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.

சமூக அவலங்களை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இது தீபாவளி வார இறுதியில் அக்டோபர் 17, 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பைசனுக்கு பின் துருவின் மிரட்டல் கூட்டணி

இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்த படத்திற்கான திட்டங்களில் முழுமையாக தீவிரமாகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த படம் சென்னையை மையமாகக் கொண்ட காதல் மற்றும் ஆக்ஷன் படமாக இருக்கலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக, கன்னடத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ருக்மிணி வசந்த் நடிக்க உள்ளார்.‘ஏஸ்’ திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் தமிழில் அறிமுகமான அவர் தற்போது சிவகார்த்திகேயன் உ டன் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இசையில் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் மணிரத்னத்துடன் இணையவுள்ளார். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இதில் பணியாற்ற உள்ளார். தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு தரமான குழுவின் கூட்டணியாகும்.

படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் துருவ் விக்ரம் மற்றும் மணிரத்னம் இணையும் இந்த கூட்டணி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.