தொடர்ந்து 3 படங்களில் கமிட்டாகி உள்ள துருவ் விக்ரம்.. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம் ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் இப்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்களுக்காக வாய்ஸ் கொடுத்தவர் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே.

தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டவருக்கு சில வெற்றிப்படங்கள் கைகொடுத்தன பாலாவின் பிதாமகன், சேது படங்கள் விக்ரமிற்கு தனி அடையாளத்தை தேடி தந்தது. சரி தனக்கு தான் எந்த வகையிலும் ஆரம்ப காலத்தில் நேரடி உதவிகள் கிடைக்கவில்லை என தன் மகனுக்கு தாராளமாக உதவுகிறார் விக்ரம்.

ஆதித்யா வர்மா என்கிற படத்தில் நாயகனாக வந்த துருவ் விக்ரமிற்கு தமிழ் திரையுலகமோ ஏகபோக வரவேற்பை தந்தது. இப்போது அடுத்தடுத்து தொடர்ந்து நடிக்க துவங்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மாஸ் ஹீரோவும் இப்போதய இளைஞர்களின் விருப்பமான ஹீரோவும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடு்த்ததாக நேரடியாக சாதிய பிரிவுகளையும் சாதிய இழிவுகளையும் அப்பட்டமாக எடுத்துரைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார் துருவ். மேலும் புதுமுக இயக்குனர் ஒருவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அந்த படத்தில் நடிப்பதற்கு ஆர்வத்தோடு காத்திருக்கிறார் துருவ் விக்ரம்.