பக்கா ரொமான்டிக் ஹீரோவாக ரெடியான துருவ் விக்ரம்.. அப்பாவை மிஞ்சிய ஹான்சம் லுக்

நடிப்பு அரக்கனாக ரசிகர்களால் பார்க்கப்படும் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் டாப் ஹீரோவாக மாற துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அவருடைய தந்தை விக்ரமும் வேண்டிய அளவிற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 

இவர் கோலிவுட்டில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு தந்தையுடன் இணைந்து மகான் என்ற படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு  கிடைக்கவில்லை. 

இருந்தாலும் எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என அடுத்தடுத்த படத்தில் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது ரொமான்டிக் ஹீரோவாக செம ஹான்சம் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ரசிகைகளை மெய்மறந்து பார்க்க வைக்கிறது.

இவருடைய இந்த லுக்கை பார்த்த பிறகு கோலிவுட்டின் சாக்லேட் பாய் இவர்தான் என்று வர்ணிக்கின்றனர். 90களில் மாதவன், அரவிந்த்சாமி, அப்பாஸ் போல் இப்போது துருவ் விக்ரம் தான் இளசுகளின் சாக்லேட் பாயாக மாறி உள்ளார்.

இவர்தான் ரொமான்டிக் படங்களுக்கு சரியான ஹீரோ என்றும் விமர்சிக்கின்றனர். தற்போது துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட ரொமான்டிக் படத்தில் நடித்து இளசுகளுக்கு விருந்தளிக்க போகிறார்.

இந்த படத்தை குறித்த முழு விவரமும் இனி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துருவ் விக்ரமின் சமீபத்திய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

துருவ் விக்ரமின் சமீபத்திய புகைப்படம்

dhruv-vikram-cinemapettai
dhruv-vikram-cinemapettai