தன்னுடைய படங்களில் எல்லாம் வித்தியாசம் காட்டுவதில் வெறித்தனமாக இருக்கும் சியான் விக்ரம், தன் மகன் துருவ் விக்ரமையும் டாப் ஹீரோவாக மாற்ற நினைத்தார். இதற்காக வேண்டிய அளவிற்கு உறுதுணையாக இருந்த சியான் விக்ரம், கடைசியில் அவராகவே முட்டி மோதி வளர்ந்து வரட்டும் என்று விட்டுவிட்டார்.
துருவ் விக்ரம் கோலிவுட்டில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு தந்தையுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று மிருகத்தனமாக ரெடியாகிக் கொண்டிருக்கும் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.
துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ‘இனியும் தோத்தா அப்பாவிற்கு அசிங்கம்’ என்று இந்த படத்திற்காக துருவ் விக்ரம் பிட்டான பாடியுடன் தயாராகி வரும் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
நிச்சயம் இந்த படம் துருவ் விக்ரமின் சினிமா கெரியருக்கு திருப்பு முனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் துருவ் விக்ரமின் இந்த படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காகவே துருவ் விக்ரம் பல மாதங்களாக கபடி பயிற்சி செய்து வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்றும், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் விரைவில் நடைபெறும் என்று கூறி உள்ளனர்.
இந்த படத்தின் மூலம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று துருவ் விக்ரம் வெறித்தனமாக கடும் உடற்பயிற்சி செய்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த ஜிம் பாடி புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் கிறங்கி தவிக்கின்றனர்.
மிருகத்தனமாக ரெடியான துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படம்
