விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்

Dhruv Vikram: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விக்ரமின் கெட்டப் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கிறது. உலகநாயகன் கமலை போலவே விக்ரமும் சினிமாவுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்.

அந்த வகையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல கெட்டப்புகளை விக்ரம் போட்டிருக்கிறார். ஆனால் அவரது மகன் துருவ் விக்ரம் ஒரு சாக்லேட் பாயாக தான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் மேலாக துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் எடுத்து வருவதால் அதற்கு ஏற்றார் போல் தனது உடல் அமைப்பை மாற்றி வருகிறார். விக்ரமுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை கட்டுமஸ்தானாக மாற்றி இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இப்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தான் பெற்றுத் தந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படமும் நல்ல வசூலை பெற்ற நிலையில் வில்லனை கொண்டாடிய படமாக இருந்தது. இப்போது துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் எடுத்து வரும் படமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

தனது மகனுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் தான் மாரி செல்வராஜிடம் துருவ் விக்ரமை, விக்ரம் ஒப்படைத்து இருக்கிறார். மேலும் துருவ் விக்ரமும் தன்னுடைய கடின உழைப்பை போட்டு இந்த படத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என போராடி வருகிறார். இந்த படத்தைப் பற்றிய மற்ற அப்டேட்டுகள் இனி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.