கதை காப்பிக்கு கொடுத்த புது விளக்கம்.. விஜய், அஜித் இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை

பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல இவர்கள் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் ஒருவர் தொடர்ந்து ஒரே சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அந்த சர்ச்சைக்கு அவர் கொடுக்கும் தன்னிலை விளக்கமும் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. அதாவது இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் விஜய்யுடன் இவர் கூட்டணி அமைத்த தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் நல்ல வசூல் லாபம் படைத்தது.

ஆனால் இவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படங்களின் காப்பியாக தான் இருந்தது. இதனாலேயே அவரை காப்பி இயக்குனர் என்று பலரும் கலாய்த்து வந்தனர். அதனால் அட்லி தனக்கு நியாயம் சேர்க்கும் வகையில் புது விளக்கம் ஒன்றை கொடுத்தார்.

அதாவது இந்த உலகத்தில் எதுவுமே புதிது கிடையாது என்றும் ஏற்கனவே உலகத்தில் நடந்ததை தான் நாம் திருப்பி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இது நல்ல சமாளிப்பாக இருக்கிறதே என்று ரசிகர்கள் கிண்டல் அடித்த நிலையில் அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்கப் போகும் மகிழ் திருமேனி இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது ஒரு கதையை காப்பி அடித்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக பேசுவது சரி கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இது ரசிகர்களை ஏமாற்றும் பசப்பு வேலை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய், அஜித் பட இயக்குனர்களின் இந்த மாறுபட்ட சிந்தனை பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

தற்போது துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு பிறகு விஜய் லியோ திரைப்படத்திலும், அஜித் ஏகே 62 திரைப்படத்திலும் பிசியாகிவிட்டனர். அதில் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் இப்படம் குறித்த பல அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.