பிரகாஷ் ராஜை வளரவிடாமல் தடுத்த தில் ராஜு.. மகனை தூக்கி விடுவதற்கு ஓரம் கட்டிய கொடுமை

Actor Prakash Raj: தெலுங்கில் மட்டுமல்லாமல் தற்போது தமிழ் படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பாளர் ராஜு, சினிமாவில் பிரகாஷ்ராஜை வளர விடாமல் தடுத்தது மட்டுமின்றி அவர் ஆசைப்பட்டு எடுக்க நினைத்த பட வாய்ப்பை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்.

தெலுங்கில் சித்தார்த்- திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் 2006 இல் வெளியான பொமரில்லு. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூதான். எனவே பொமரில்லு படத்தின் ரீமேக் உரிமையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற போட்டியில், அதிக பணத்தை கொடுத்து அந்த படத்தின் ரீமேக் உரிமையை ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் பெற்றிருக்கிறார்.

ஆனால் பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை எப்படியாவது வாங்கி, அதில் விஷாலை கதாநாயகனாக வைத்து படத்தை எடுக்க வேண்டும் என பெரிய பிளான் போட்டு வைத்திருந்தார். ஆனால் எடிட்டர் மோகன் இந்த படத்தின் ரீமிக்ஸ் ரைட்ஸ்சை வாங்கி தன்னுடைய மகன்களிடம் கொடுத்துவிட்டார். அப்படி உருவான படம் தான் சந்தோஷ் சுப்ரமணியம்.

இந்த படத்தின் ப்ராஜெக்டை எடிட்டர் மோகன் வங்கி அதை தன்னுடைய மகனிடம் கொடுத்து விட்டார். சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தை மோகன் ராஜா இயக்க, ஜெயம் ரவி அதில் கதாநாயகனாக நடித்திருப்பார். தெலுங்கைப் போலவே தமிழிலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒருவேளை இந்த வாய்ப்பு பிரகாஷ்ராஜுக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் விஷால் தான் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆனால் அது நடக்காமல் போனது. இதை நினைத்து இப்போது வரை பிரகாஷ்ராஜ் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.

ஆனால் தில் ராஜு நினைத்திருந்தால் இதை பிரகாஷ்ராஜிற்கு கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் எடிட்டர் மோகனின் மகன்களை தூக்கி விடுவதற்காக பிரகாஷ்ராஜை ஓரம் கட்டிய கொடுமை அரங்கேறியிருக்கிறது.