நடிகையின் கதறல் வீடியோவை பார்த்து ரசித்த பிரபல நடிகர்.. திரையுலகை கதிகலங்கச் செய்த சம்பவம்

சில வருடங்களுக்கு முன் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தி சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியத் திரையுலகமே அந்த நடிகைக்கு ஆதரவாக களமிறங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டது.

நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகையின் கார் டிரைவர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் நாம் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தது. அதாவது மலையாள நடிகர் திலீப் தான் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களாக நடந்து வந்த விசாரணையில் நடிகர் திலீப்பிற்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அவரை விடுதலை செய்தது. தற்போது இந்த வழக்கு கொச்சியில் பெண் நீதிபதி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நமக்குத் தெரியாத ஒரு புது தகவலை பிரபல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருக்கிறார். அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் திலீப் நடிகையின் பலாத்கார சம்பவ வீடியோவை போனில் திரும்பத் திரும்ப பார்த்து ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகையின் கதறலையும் அவர் கேட்டுக் கேட்டு ரசித்துள்ளார்.

மேலும் திலீப் நடிகை உடன் இருந்த சொந்த பகையின் காரணமாக தான் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். அதோடு நடிகையை வன்கொடுமை செய்த அந்த வீடியோவையும் அவர் தனக்கு நெருக்கமான பலருக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் யார் யார் என்பது குறித்த அனைத்து தகவல்களும் தனக்கு தெரியும் என்று இயக்குனர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்படைந்தது. அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் அதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். அதில் திலீப் பயன்படுத்திய செல்போனில் இருந்து பல தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் போலீசார் தடவியல் நிறுவனம் மூலம் மீட்டுள்ளனர். அதில் இருந்த பல உரையாடல்கள், வீடியோக்கள் என அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சில சாட்சியங்களை திலிப் அளிக்க முயன்றதாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இயக்குனர் பாலச்சந்திரன் சமர்ப்பித்த சில ஆதாரங்களும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யாவுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.