தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு விஜய்யின் வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். மேலும் விஜய் நடித்திருந்ததால் வாரிசு படம் நல்ல வசூலை பெற்று தந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல கோடிகளை வாரிசு படம் அள்ளியது.
மேலும் கிட்டதட்ட 300 கோடியை தாண்டி வாரிசு படம் வசூலை குவித்தது. இந்நிலையில் வாரிசு படத்தில் சம்பாதித்ததை மொத்தமாக தில் ராஜு இப்போது இழந்துள்ளார். ஒரே படத்தால் கிட்டத்தட்ட 23 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக புலம்பி தவித்து வருகிறாராம். மேலும் தன்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு நஷ்டத்தை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
அதாவது சமீபத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் படம் வெளியானது. புராண கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமந்தாவை தவிர மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை. அதுமட்டுமா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் போல இந்த படத்தை எடுத்திருந்தார்கள்.
அதுமட்டுமின்றி சாகுந்தலம் படத்தை 3d அனிமேஷனில் எடுத்து அதிலும் பல கோடி செலவு செய்துள்ளார் தில் ராஜு. கடைசியில் படம் வெளியாகி திரையரங்குகளில் வெறும் ஏழு கோடி மட்டுமே வசூல் செய்து இருந்ததாம். மொத்தமாக இப்படம் 65 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு எடுத்திருந்தார்.
மேலும் சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 35 கோடிக்கு ஓடிடி தளம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. இதனால் 23 கோடி நஷ்டத்துடன் தில் ராஜு தப்பித்தார். அவ்வாறு ஓடிடிக்கு விற்கப்படவில்லை என்றால் இன்னும் பெரிய நஷ்டத்தை தில் ராஜு சந்தித்திருக்க கூடும். மேலும் படத்தில் ஏழு கோடி வசூலும் சமந்தாவால் தான் வந்துள்ளது.
இந்நிலையில் சாகுந்தலம் படத்தால் சம்பாதித்த மொத்த பணமும் போச்சே என தில் ராஜு புலம்பி வருகிறாராம். இதனால் அடுத்த படத்தை தயாரிக்கவே அஞ்சி வருகிறாராம். சமந்தா படத்தால் இப்படி ஒரு நஷ்டம் தில் ராஜு படத்திற்கு ஏற்பட்டது திரை வட்டாரத்தில் மிகப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.