ஷங்கர் வாழ்க்கையில் விளையாடிய கார்த்திக் சுப்புராஜ்.. அரைகுறை மைண்ட் செட்டில் தில்ராஜ்

ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் நேற்று ரிலீஸ் ஆகி எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படம் ஷங்கர் சம்பாதித்து வைத்த மொத்த பெயரையும் கெடுத்தது.

கேம் சேஞ்சர் படம் தான் மீண்டும் சங்கரின் சினிமா கேரியரை பூஸ்ட் செய்யும் என பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஷங்கரின் பிரம்மாண்டம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

படத்தை 450 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் எடுத்துள்ளார். இவ்வளவு காசுகளுக்கு இந்த படம் தகுதியானதா என்பது கேள்விக்குறிதான். இதைமுழுக்க முழுக்க கமர்சியல் படமாக எடுத்துள்ளார் ஷங்கர். தயாரிப்பாளர் தில்ராஜ் போட்ட காசையாவது எடுத்து விடலாமா என அரைகுறை மைண்ட் செட்டில் இருக்கிறார்

படத்தில் பெரும்பாலும் தெலுங்கு சாயல் தெரிகிறது. ஷங்கர் இதற்கு முன் இயக்கிய சிவாஜி, முதல்வன், போன்ற படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. நான்கு படங்களை சேர்த்து பார்த்ததைப் போன்ற உணர்வை இந்த படம் கொடுக்கிறது.

ஏற்கனவே இந்த கதையை ஷங்கர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து தான் வாங்கி இயக்கியுள்ளார். அவரே இதை பல ஷங்கர் படங்களில் பார்த்து தான் புதிதாய் ஒரு கதையாக உருவாக்கி இருக்கிறார். மீண்டும் இதை வாங்கி ஷங்கரே இயக்கியுள்ளார். அவர் முந்தைய படங்களை இந்த படம் ஞாபகப்படுத்துகிறது என அனைவரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment