நயன்தாராவுக்காக படத்தின் பட்ஜெட்டில் கைவைத்த இயக்குனர்.. ரஜினிக்காக விட்டுக் கொடுக்காத லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா இன்று 15 முதல் 18 கோடிகள் வரை சம்பளம் வாங்கி வருகிறார். தற்சமயம் தெலுங்கில் அவர் சிரஞ்சீவியுடன் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு 18 கோடிகள் சம்பளம். அந்த சம்பளத்திற்காகவும் நிறைய பிரச்சனை செய்தார். பின் சிரஞ்சீவி தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.

இப்படி இந்த படத்திற்கு மட்டுமில்லாமல் ஏற்கனவே அவர் பல படங்களுக்கும் பிரச்சனை செய்துள்ளார். தற்போது தமிழில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அந்த படத்திற்கும் நிறைய தொல்லை கொடுத்து வந்தார். அங்கே சூட்டிங் வேண்டாம் இந்த ஆடை அணிய மாட்டேன் என பிரச்சனை செய்துள்ளார்.

நயன்தாரா மற்றும் ரஜினி இணைந்து நடித்த படம் அண்ணாத்த. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி வந்தார். அந்தப்படத்திலும் நயன்தாரா தனி விமானம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற்ற போது ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் போனதாம்.

கிடைத்த சிறு இடைவெளியில் ஹீரோயின் நயன்தாரா கேரளா சென்று விட்டாராம். ஒரு கட்டத்தில் சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் தான் முக்கியம் படத்திற்கு பிரேக் கொடுக்கலாம் என கூறி விட்டார்களாம்., ரஜினி சரியான உடன் கிடைக்கிற கேப்பில் படத்தை முடிக்க நினைத்துள்ளார் சிவா.

கேரளாவில் இருக்கும் நயன்தாரா என்னால் வர முடியாது தனி பிளைட் வேண்டுமென கண்டிஷன் போட்டுள்ளார். அதன் பின்னர் படத்திற்காக போடப்பட்ட செட் மற்றும் கேமராக்களின் லென்ஸ்களை குறைத்து சிக்கனம் செய்து கிடைத்த தொகையில் இருந்து தனி பிளைட் கொடுத்து அழைத்து வந்துள்ளார் சிவா.