எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும்.. ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டும் பாலா

பொதுவாக இயக்குனர்கள் என்றாலே கொஞ்சம் கண்டிப்பாக தான் இருப்பார்கள். அந்த காலத்தில் எல்லாம் இயக்குனரை பார்த்தாலே பயந்து நடுங்கிய முன்னணி நடிகர்களும் உண்டு. ஆனால் போக போக ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை தொடர்ந்து இப்போது ஹீரோக்கள் சொல்வதை தான் இயக்குனர்கள் கேட்கிறார்கள்.

ஆனால் பாலாவுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்காது. எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும் என்ற ரேஞ்சுக்கு மிரட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களிலேயே பாலா கொஞ்சம் வித்தியாசமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ரொம்பவும் கண்டிப்புடன் நடந்து கொள்வது, நடிகர்களை சக்கையாய் பிழிந்து வேலை வாங்குவது என இவர் தனி ட்ராக்கில் பயணிக்கிறார்.

அது மட்டுமின்றி எந்த நடிகராய் இருந்தாலும் தனக்கு கீழ்ப்படிந்து தான் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அவர் நாற்காலியில் உட்கார்ந்து பேசும்போது மற்றவர்கள் கீழே அமர்ந்து தான் பேச வேண்டும் என்பது போன்ற பல சட்ட திட்டங்கள் அவருக்கு இருக்கிறது. அதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு பலரும் பயந்து நடுங்குவார்கள்

ஏனென்றால் சில சமயங்களில் இவர் கைநீட்டி அடித்து விடுவாராம். அந்த வகையில் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கூட பயப்படாத நடிகர்கள் பாலா என்றால் கொஞ்சம் மிரண்டு தான் போகிறார்கள். தற்போது வணங்கான் படப்பிடிப்பில் கூட சமுத்திரகனி இவ்வாறு தான் நடந்து கொள்கிறாராம். எப்படி என்றால் பாலா பேசும் போது இவர் கீழே உட்கார்ந்து கைகட்டி பேசி வருகிறாராம்.

இதை யூனிட்டில் இருந்தவர்கள் பார்த்து விட்டு சினிமா நண்பர்களிடம் கூறியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த விஷயம் தற்போது திரையுலகில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு சூர்யா நடித்த போது அவரும் இப்படித்தான் இருந்தாராம். இது பற்றி ஏற்கனவே பல செய்திகள் வெளி வந்திருக்கிறது.

இது ஒரு சர்ச்சையாக பேசப்பட்டாலும் சில நடிகர்களுக்கு பாலா போல் கண்டிப்பாக இருக்கும் ஒரு இயக்குனர் தேவை தான். அப்படி இருந்தால் தான் படம் எதிர்பார்த்தது மாதிரி வரும். அந்த வகையில் தற்போது இருக்கும் இயக்குனர்களில் தன்னிடம் பணி புரிபவர்களை ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்த ஒரே இயக்குனர் பாலா மட்டும் தான்.