1000 கோடி முக்கியம் இல்ல! அவங்க சொல்லிட்டு போயிருவாங்க.. அடி விழுறது என்னவோ எனக்குத்தான், லோகேஷ்-ன் கஷ்டகாலம்

Logesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றி பட இயக்குனராக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய அத்தனை படங்களுமே மாபெரும் வெற்றியை இதற்கு தேடித் தந்தது. அதற்கு பிறகு இவர் தனக்கென ஒரு பாணியில் சினிமாவை தொடர ஆரம்பித்தார். இவர் திரைப்படம் அனைத்தையுமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பது போல எடுத்து தனக்கென ஒரு LCU கான்செப்ட்டை உருவாக்கிக் கொண்டார்.

இந்த கான்செப்ட் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடுத்தடுத்து வர இயக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. வெற்றியைத் தேடித் தந்தவர்கள் மட்டுமல்லாமல் அதிகளவில் வசூலையும் பெற்று தந்தது.

இவ்வாறு இருக்கையில் இவர் தற்போது கூலி படத்தை இயக்கி அந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையிலும் உள்ளது. இந்த படத்தில் அப்டேட் அவ்வபோது வெளிவந்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்ஜை தொடர்ந்து நேர்காணல் எடுத்து வருகிறார்கள். தற்போது இவர் பேசியிருக்கும் நேர்காணல் ஒன்றில் சினிமா என்றாலே அதில் ஒரு படம் செய்யும்போது அந்த படத்தில் நிறைய நபர்கள் வேலை செய்வார்கள்.

அவங்க சொல்லிட்டு போயிருவாங்க..

அந்த படம் முடிந்தவுடன் அந்த படத்தை பற்றி நேர்காணல் கொடுப்பார்கள். அவ்வளவு நபர்கள் ஒர்க் பண்ணும் போது நான் தினமும் ஒவ்வொருவரிடமும் போனில் தொடர்பு கொண்டு சொல்லி விடாதீர்கள் ஆயிரம் கோடி என்று சொல்லாதீங்க என்று கூற முடியாது.

அவர்கள் அதை தெரிந்தும் செய்வதில்லை மறந்து போய் சில நபர்கள்கூறி விடுகின்றனர். அவர்கள் அவ்வாறு கூறுவது கூட எனக்கு தான் பிரஷர் ஆகிறது. அந்த நாள் முடியும் போது போஸ்ட் வரவில்லை, அப்டேட் ஏதும் வரவில்லை, சாங்ஸ் ஏதும் வரவில்லை என அத்தனை கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க வேண்டியதாய் இருக்கிறது.

1000 கோடி முக்கியம் இல்லடா..

“நீங்க யார் என்ன பண்ணா என்ன! இறுதியில் அடி வாங்க போறது என்னவோ நான் தான் என்பது போல” ஆகிவிட்டது என் நிலைமை என்று கூறாமல் கூறியிருப்பார் லோகேஷ் கனகராஜ் அவர்கள். அது மட்டுமல்லாமல் இவர் சினிமாவில் ஆயிரம் கோடி என்பது என்றுமே முக்கியம் கிடையாது. ஒரு படம் ஒருவர் மனதில் எப்படி பதிகிறது என்பதை முக்கியம் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை பார்த்தாலும் கூட அந்த உள்ளுணர்வு இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.