வாய்க்கு வந்தபடி பேசும் மிஸ்கினா இது!. ஒருத்தருக்கு மட்டும் வெட வெடுத்து பம்மும் கருப்பு கண்ணாடி

Director Mysskin: சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத இயக்குனர் தான் மிஸ்கின். இவர் தொடர்ந்து அஞ்சாதே, பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் போன்ற நல்ல நல்ல படங்களை கொடுத்தவர். இருப்பினும் இவருக்கிட்ட இருக்கக்கூடிய பெரிய மைனஸ் பாயிண்ட், பொதுவெளிகளில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகம் சுத்தமாகவே இல்லாமல் இருக்கிறார்.

அதிலும் மேடையில் எப்படி பேசணும் என்கிறதே தெரியாது. அவன், இவன் என வாய்க்கு வந்தபடி நடிகர்களை கூப்பிடுகிறார். சொல்லவே கூச்சப்படும் ஒரு கெட்ட வார்த்தையை அசால்டாக பேசுகிறார். இப்படி சக நடிகர்களையும் நடிகைகளையும் பேசும் இவர் ஒருவருக்கு மட்டும் வெட வெடுத்து பம்முவார்.

எங்கே அந்த பெரிய இடத்தை பகைத்துக் கொண்டால் பிரச்சனை வரும் என்று சர்வத்தையும் அடக்கி வாசிப்பார். அவரை வைத்து படம் கூட எடுத்திருக்கிறார். ஆளும் கட்சி எம்பி உதயநிதி ஸ்டாலின் தான் அது. மூன்று வருடத்திற்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் தான் சைக்கோ.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்ட நடிகைகள் இணைந்து நடித்தார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின் இரு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளியாக கௌதம் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்தார். இதுவரை மிஸ்கினுடன் இணைந்த நடிகர்களை எல்லாம் இந்த கண்ணாடி இயக்குனர் வம்புக்கு இழுக்காமல் விடமாட்டார்.

அப்படி இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினை மட்டும் எதுவும் பேசாமல் அவரைப் பார்த்தால் பம்மிக்கொண்டு இருக்கிறார். இதற்கெல்லாம் நிச்சயம் காரணம் இருக்கும். அவரைப் பகைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவோம் என்பதால் தான் அவர் இந்த அளவிற்கு அடக்கி வாசிக்கிறார்.

அது மட்டுமல்ல மிஸ்கின் ஏதாவது பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஏசி ரூமில் கூட கூலர் போட்டுக் கொண்டு ஓவர் அலப்பறை செய்வதால், ‘கருப்பு கண்ணாடி இயக்குனர்’ என்று அவரை சோசியல் மீடியாவில் பங்கம் செய்கின்றனர். அத்துடன் இப்போது அவர் உதயநிதியை பார்த்தால் வெட வெடுத்து பம்மும் விஷயமும் வெளி வந்துள்ளதால் அதை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.