வியக்க வைக்கும் ராஜமவுலியின் மொத்த சொத்து மதிப்பு.. 50 வயதிலும் அடங்காத திறமை

Rajamouli’s Net Worth: நம்ம ஊரு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை ஓரங்கட்டி பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டிய ராஜமவுலி இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாகுபலி என்ற படைப்பின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இவர் ஆர்ஆர்ஆர் மூலம் ஆஸ்கர் வரை சென்றார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனராக அடி எடுத்து வைத்த இவர் 20 வருடங்கள் கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவிலான படங்களையே இயக்கியிருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றும் தாறுமாறாக ஹிட் அடித்து இவருக்கான வாழ்நாள் அடையாளத்தை உருவாக்கியது.

அதனாலேயே பல நடிகர்கள் இவருடைய படத்தில் நடித்து விட மாட்டோமா என்று ஏங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். அந்த வகையில் ஒரு படத்திற்காக இவர் தற்போது ஐம்பதிலிருந்து 60 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவருடைய சொத்து மதிப்பு என்று பார்த்தால் 160 கோடியாக இருக்கிறது. அதில் ஹைதராபாத்தின் முக்கிய பகுதியில் இவருக்கு பிரம்மாண்ட பங்களாவும் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல கோடியை தாண்டும். இது தவிர அழகிய பண்ணை வீடும் இருக்கிறது.

அதில் தான் இவர் அதிக நேரம் செலவிடுவாராம். அதை தொடர்ந்து இவரிடம் 1.5 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரேஞ்ச் ரோவர், வால்வோ எக்ஸ்சி உள்ளிட்ட ரக ரகமான கார்களும் இருக்கிறது. இதன் மதிப்பு மட்டுமே ஐந்து கோடியை தாண்டுமாம்.

இது தவிர இவர் தன்னுடைய பணத்தை பல தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறார். இப்படி ராஜா போன்று வாழ்ந்து வரும் இவர் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து தன்னுடைய கனவு படத்தை இயக்கவும் திட்டம் பெற்றுள்ளார். ஆனால் அது ரசிகர்களின் பார்வைக்கு வருவதற்கு சில வருடங்கள் ஆகும். அந்த வகையில் தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் ராஜமவுலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.