Director Venkat Prabhu – Ajith: தமிழ் சினிமாவில் நடிகராகவும் அதன்பின் இயக்குனராகவும் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் இவர் எல்லாருக்கும் இயக்குனராக தெரிந்த படம் தான் மங்காத்தா. ஏகே 50 பட வாய்ப்பு பெரிய இயக்குனரிடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் வெங்கட் பிரபு-விடம் கொடுத்தார்.
இது அந்த சமயத்தில் பெரிதும் பேசும் பொருளாக மாறியது. ஏனென்றால் வெங்கட் பிரபு ஒழுங்கா படம் எடுக்க மாட்டார், இவரிடம் எதற்கு அஜித் படம் கொடுத்தார் என ஏகப்பட்ட கேலி கிண்டல் பேச்சுக்கள் வந்தது. அஜித் தன்னுடைய முக்கியமான படத்தை வெங்கட் பிரபுவிடம் தர போகிறார் என்று ரொம்ப நெகட்டிவாகவே ரசிகர்களும் பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து ஒரு கட்டத்தில் வெங்கட் பிரபு- அஜித் இருவரும் தனியாக சந்தித்து பேசினர். அப்போது அஜித்திடம் வெங்கட் பிரபு, ‘எனக்கு இந்த படம் வேண்டாம் எல்லாரும் தப்பா பேசுவாங்க’ என்று அழுதார். அப்போது அஜித் கூலா சிரித்து விட்டு, ‘யாரியா யோவ்! பின்னாடி பேசுறவங்க, தப்பா எழுதுவாங்க என நினைத்தால் நம்மளால் ஒன்றும் பண்ண முடியாது.
அஜித் அளவு கடந்த நம்பிக்கை
எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு ஸ்கிரிப்ட் மேல நம்பிக்கை இருந்தா வாங்க! படம் பண்ணலாம் என்று மங்காத்தா படத்தில் நடிக்க முன் வந்தார். வெங்கட் பிரபு மீது அஜித் அளவு கடந்த நம்பிக்கை வைத்ததால் தான் மங்காத்தா என்ற வெற்றிப் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது.
அதே போல் தான் இப்போது விஜய்யும் வெங்கட் பிரபு மீது அபரிவிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தளபதி 68 படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்துக்கு ஒர்க் அவுட் ஆனது இப்போது விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பது தளபதி 68 படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும்.