அடுத்தடுத்து அகலக்கால், ஒருசேர பெரிய பெரிய படங்கள் தயாரிப்பு, போன்ற காரணங்களால் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளானது. சில படங்கள் போடாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் தயாரிப்பதையே நிறுத்தி விடலாம் என லைக்கா எண்டு கார்டு போட தயாராக இருந்தது
சந்திரமுகி 2, லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் விடாமுயற்சி என பெரிய பெரிய படங்களை நம்பி மோசமான நஷ்டத்தை சந்தித்தது இந்த நிறுவனம், சமீபத்தில் நிதி பற்றாக்குறையால் வேலை பார்க்கும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமையை கூட சந்தித்தது.
தற்போது அவர்கள் கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. ஒன்று விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க போகும் ஒரு படம், மற்றொன்று அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், லாக் டவுன் என்ற படம் . இந்நிலையில் தான் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுபாஸ்கரன் அல்லிராஜா நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் லைக்கா நிறுவனம் கிட்டத்தட்ட ஒன்பது படங்களை தயாரிக்க உள்ளது. இதில் ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்கள் நடிக்க உள்ளனர்.இது எப்படி சாத்தியமாகும் என யோசிக்கையில் லைக்கா நிறுவனமே சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது.
ஹாலிவுட்டில் மகாவீர் ஜெயின் என்ற தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்களுடன் லைக்கா கூட்டணி போட்டிருக்கிறார்கள். இவர்கள் உதவியுடன் தான் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கவும் இருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது நல்ல கதை அம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து வருகிறது லைக்கா நிறுவனம்