90களில் வில்லனாக கொடி கட்டி பறந்த நடிகர் ரகுவரன், வில்லனாக எப்படி உருவானேன் தெரியுமா என 24 வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது விடாமுயற்சியின் மூலம் ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியிலே அமைந்தது ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்தார். அது சின்ன ரோலாக இருந்தாலும் சரி அதனை ஏற்று நடித்து வெற்றி கண்டார்.
அதன் மூலம் சினிமா துறையில் தனது பெயரினை நிலையாக நிறுத்தினார். படிப்படியாக தனது நடிப்பின் திறனை வளர்த்துக் கொண்டு ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்து வந்த வேலையில் திடீரென்று திரைத் துறையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அஞ்சலி படம் ரகுவரனுக்கு ஒரு சிறந்த படமாக அமைந்தது.
அதில் இரு குழந்தைகளுக்குத் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் தொடர்ந்து ஒரே கதாபாத்திரத்தை ஏற்று நடக்காமல் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.
திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால் அதனை மிகவும் சரியாக பயன்படுத்தி தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். உதாரணத்திற்கு பாட்ஷா, முதல்வன் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். முதல்வன் படத்தில் வயதான தோற்றத்தில் அரசியல்வாதியாக தனது வில்லத்தனத்தை காட்டியிருப்பார் .
ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தினையே ஏற்று நடித்துக் கொண்டிருப்பதில் சலிப்பு ஏற்பட்டு பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பிற மொழி படங்களிலும் கவனத்தை செலுத்தினார்.
ஒரு சிறந்த நடிகருக்கான தேசிய விருது எனக்கு கிடைக்காமல் போனாலும் எல்லா மொழிகளிலும் எனக்கு இருக்கின்ற ரசிகர்களின் கைதட்டல் தான் எனக்கு மிகப்பெரிய விருதாக இருந்தது.ரகுவரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடன் பேசாமலும் தனது தொழிலின் மீது மட்டுமே கவனம் செலுத்துவார். இதனால் இவர்களை பார்க்கும் ரசிகர்களாகட்டும் யாராக இருக்கட்டும் புரியாத புதிராகவே இருக்கின்றார் என்று தான் நினைத்துக் கொள்வார்களாம்.
ரகுவரன் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர நாயகனாகவும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரகுவரன் கடைசியாக தமிழில் தனுஷ் உடன் “யாரடி நீ மோகினி” படத்தில் நடித்திருப்பார். இதுவே அவர் நடித்த கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு உடல்நிலை மோசமான காரணத்தினால் நடிப்பதை தவிர்த்து வந்தார். 19 மார்ச் 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இருப்பினும் முன்னணி வில்லனாக டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் நடிகராக இருந்த ரகுவரன், இயல்பாகவே சாதுவான குணம் கொண்ட அவர் வில்லனாக நடிப்பதற்காகவே நிறைய ஹோம் ஒர்க் செய்ததுடன், அவர்களது குணாதிசயம் அத்தனையும் தன்னுடைய நடிப்பில் கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்கள்.