மலையாள உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடியவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் அதிக அளவில் மலையாள படங்களில் நடித்ததன் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். தமிழில் அசுரன், அரபிக்கடலின் சிம்ஹா போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு டாப் ஹீரோக்களாக இருக்கும் தல தளபதி இவர்களின் படங்கள் ஒரே நாளில் எதிரும் புதிரும் ஆக மோதிக் கொள்ளை இருக்கின்றனர். இதில் படத்தின் சுவாரசியத்தை இன்னும் கூட்டுவதற்காக ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் களம் இறங்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 இல் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவானது அதிகாலை ஒரு மணி அளவில் திரையரங்கில் ஒளிபரப்பாக உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் டிரைலரில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பட்டியை கிளப்புவார் என்று மிகுந்த ஆர்வத்துடன் அஜித்தை திரையில் காண்பதற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தில் வரும் காட்சிகள் பெண்கள் மற்றும் திருநங்கைகளை மையப்படுத்தியும் அளவுக்கு அதிகமான சண்டை காட்சிகளும் இருப்பதால் படம் எப்படி இருக்குமோ என்ற கண்ணோட்டத்திலும் ரசிகர்கள் வெவ்வேறு விதங்களில் யூகித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து துணிவு படத்தின் நாயகி ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் படத்தினைப் பற்றிய பல்வேறு விதமான கருத்துகளும் கனவு கலந்த கற்பனைகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புடன் படத்திற்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் படத்தின் மீது ரசிகர்களாகிய உங்களுடைய மன அழுத்தம் தரக்கூடியவை ஆக கருத்து விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் பல்வேறு விதங்களில் போட்டிகளாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்த்து அமைதியாகவும் சந்தோஷமாகவும் குடும்பங்களாக திரையரங்கிற்கு சென்று துணிவு படத்தினை பார்க்க வேண்டும் என்று படத்தின் நாயகி மஞ்சுவாரியர் அவர்கள் அன்புடன் இந்த வேண்டுகோளை விடுக்கிறார்.