Cinema : திரையுலகம் என்றாலே ஒரு டேக் என்றாலும் அதுக்கும் காசுதான் என்ற நிலைமை தற்போது உள்ளது. தோல்வி அடைந்த படங்களில் எல்லாம் கூட நடித்து கொடுத்திருந்த நடிகர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தை தொங்கலில் விட்ட கதையெல்லாம் பார்த்திருக்கிறோம்.
இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்ற பட்டியலையே தயாரித்து வெளியிடும் அளவிற்கு நடிகர்கள் சம்பளம் வாங்குகிறர்கள் என்பது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. அந்த வகையில் படத்தின் பட்ஜெட்டை மீட்டெடுப்பதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம்வாங்காமல் அந்த சம்பளத்தை படத்தை மீட்டெடுக்கக்கூடிய பட்ஜெட்டாக கொடுத்த புகழ்பெற்ற நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சம்பளம் இல்லாமல் நடித்த 2 ஹீரோக்கள்..
அல்லுஅர்ஜுன் : தெலுங்கு நடிகரான இவர் நடித்து வெளிவந்த ருத்ரமாதேவி படத்திற்காக தன் சம்பளத்தை பெறாமல் அந்த படத்திற்காக போடப்பட்ட பட்ஜெட்டை மீட்டெடுப்பதற்காக களமிறங்கி சம்பளத்தை துறந்துள்ளார். இந்த ருத்ரமாதேவி படம் 2015ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரபலமான நடிகரால் பலர் நடித்துள்ளனர். இதன் பட்ஜெட் 80 கோடி. இவர் நடித்த புஷ்பா 1, புஷ்பா 2 ஆகிய படங்க நல்ல வசூலை பெற்று திரையுலகை திக்குமுக்காட வைத்திருக்கிறது. நல்ல வசூலை ஈட்டித்தந்த நடிகர் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார் அல்லுஅர்ஜுன் அவர்கள்.
பிரபாஸ் : நடிகர் பிரபாஸ் அவர்களும் நன்கு பேர்போன தெலுங்கு நடிகர். இவர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் கண்ணப்பா படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த படமானது சிவ பக்தரான கண்ணப்பா பற்றிய புராண கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் நியாய பிரபலங்கள் நடித்து படத்திற்கு மேலும் பெருமையை சேர்த்துருகின்றனர்.
இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி, இந்த படம் தற்போது திரையில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை மீட்டெடுப்பதற்க்காக பிரபாஸ் அவர்கள் தனது சம்பளத்தை பெறாமல் உதவி இருப்பது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபாஸ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்கள் திரையுலகைள நல்ல வசூலை பெற்ற தந்த படங்களில் முக்கியமாக உள்ளது. அல்லுஅர்ஜூன் மற்றும் பிரபாஸ் செய்த செயல்கள் வெறும் பணத்திற்காக நடிக்கும் நடிகர்கள், தான் நடிக்கும் சில படங்களின் தோல்விகளை சந்திக்காமல் இருக்க இவ்வாறு தனது சம்பளத்தை பெறாமலும் உதவி செய்யலாம் என கூறும் வகையில் முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.