இந்த 2 முக்கிய காரணங்களால் விடுதலை பான் இந்தியா படமாக எடுக்கவில்லை.. தெனாவட்டான வெற்றி மாறன்

தற்போது இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் பான் இந்தியா மூவியாக வரவேண்டும் என்று டார்கெட் செய்து அதற்கு ஏற்ற மாதிரி கதைகளையும் நடிகர் நடிகைகளையும் வைத்து உருவாக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. அப்பொழுது தான் அவர்கள் எதிர்பார்த்த அளவைவிட லாபமும் வரும் அதே நேரத்தில் ஈஸியாக ஃபேமஸ் ஆகிவிடலாம் என்று நம்பிக்கையில் படத்தை இயக்குகிறார்கள்.

ஆனால் இதற்கு மத்தியில் சற்று வித்தியாசமாக வெற்றிமாறன் இருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த விடுதலை படம் பார்வையாளர்களின் அதிக விமர்சனங்களையும் பெற்று சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் இவர் அதிகமான துணிச்சலான விஷயங்களை செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

முதலில் இப்படிப்பட்ட கதைக்கு ஏற்கனவே ஹீரோவா இருக்கும் நடிகர்களை கமிட் செய்யாமல் புது ஹீரோவாகவும் இல்லாமல் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சூரியை இந்த கதைக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்து நடிக்க வைத்ததே பெரிய துணிச்சல் வேண்டும். ஆனாலும் இவர் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் இப்படம் பெற்று வருகிறது.

அத்துடன் சமீபத்தில் வரும் அனைத்து படங்களும் பான் இந்திய படமாக எடுத்து வசூல் வேட்டையை அதிகரிக்கின்றனர். ஆனால் விடுதலை படம் ஏன் பான் இந்தியா படமாக எடுக்கப்படவில்லை என்று கேட்டபோது அதற்கு வெற்றிமாறன் கொடுத்த பதில் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியப்படவும் வைக்கிறது. அதாவது இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்.

ஒன்று இந்த படத்தை அப்படி எடுத்தால் அதற்கு ஏற்ற மாதிரி மற்ற மொழிகளில் இருந்தும் சில நடிகர் நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படி செய்வது விருப்பமில்லை, அத்துடன் அவர்கள் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி எனக்கு செட்டே ஆகாது என்று கூறி இருக்கிறார்.

அடுத்ததாக வடநாட்டில் இருப்பவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு ஏதாவது விபரீதமாக செய்து விடுவார்கள் என்று பெரிய அளவில் அச்சம் இருந்ததால் பான் இந்தியா படமாக எடுப்பதை தவிர்த்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். ஏனென்றால் அங்கே தீவிரவாதம் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதனால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை என்று தெனாவட்டாக பதில் அளித்து இருக்கிறார்.