Actor Dulquer Salmaan: சாக்லேட் பாய் தோற்றத்தில் அமுல் பேபி போல் இருக்கும் துல்கர் சல்மானுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்கின்றனர். அதனாலேயே அவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு படம் அவருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் கடந்த மாதம் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கருடன் இணைந்து பிரசன்னா, சபீர், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் கிங் ஆஃப் கோதா. மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்ட அப்படம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
இதை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் அமுல் பேபி மூஞ்சிக்கு செட்டாகாத ரவுடி கேரக்டர் தான்.
அது மட்டுமல்லாமல் படத்தில் இருந்த ஓவர் ஹீரோயிசமும் ரசிக்கும் படி இல்லை. அதில் கலாபக்காரா பாடல் மட்டும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதைத் தாண்டி படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனாலேயே இதற்கான வரவேற்பும் அடுத்தடுத்த நாட்களில் மங்கத் தொடங்கியது.
அந்த வகையில் கிங் ஆஃப் கோதா வெறும் 38 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதைத்தொடர்ந்து வெளியான ஒரு மாதத்திலேயே இப்படம் ஓடிடி-க்கும் வர இருக்கிறது. அதன்படி வரும் 29ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
இதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த வருடம் துல்கரின் சீதா ராமம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து இப்படம் வசூல் சாதனை செய்யும் என்று நினைத்த வேளையில் அவருக்கு சிறு சறுக்களை கொடுத்துள்ளது.