மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சிந்து மேனன, அதன் பிறகு மோகன்லால், ஜெயராம், மம்முட்டி உடன் இணைந்து நிறைய மலையாள படங்களில் நடித்ததுடன் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
கணவருடன் சிந்து மேனன்

பிறகு இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு குடும்பத்திற்காகவே முழுநேரத்தையும் செலவிட விரும்பி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இருப்பினும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிந்து மேனன் அவ்வப்போது தனது சமீபத்திய குடும்ப புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சிந்து மேனனின் 3 குழந்தைகள்

அவ்வாறு தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் வரிசையாக அமர வைத்து போட்டோ எடுத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஈரம் படத்தில் கதாநாயகிக்கு மூன்று பிள்ளைகளா! என வாயடைத்துப் போயிருக்கின்றனர்.
சிந்து மேனனின் குடும்ப புகைப்படம்

அதிலும் அவரது மூத்த மகள் நெடுநெடுவென வளர்ந்து அம்மாவை மிஞ்சி நிற்கிறார். தற்போது சிந்து மேனன் அவருடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் லண்டனில் செட்டில் ஆகி உள்ளார். இவரது சமீபத்திய குடும்பத்தை புகைப்படங்கள் இணையத்தில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.
அம்மாவை மிஞ்சிய பொண்ணு
