கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரிய சென்சேஷனல் வரவேற்பை பெற்ற பாடல் தான் என்ஜாய் என்ஜாமி(Enjoy Enjaami) பாடல். திரும்பிய பக்கமெல்லாம் இந்த பாடல் தான். பெரும்பாலும் இந்த பாடல் குழந்தைகளை கவர்ந்து விட்டது.
பாடகர் அறிவு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த இந்தப் பாடல் யூடியூபில் தற்போது வரை 275 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இது இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி போன்றோரின் பாடல்கள் படத்தின் சாதனையை விட அதிகம். இந்த பாடல் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
இந்த பாடலில் இடம்பெற்ற வயதான பாட்டியின் குரலில் பாடியவர் பாக்கியம் அம்மாள் என்பவர். இவர் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டதாக இந்த பாடலை பாடிய அறிவு என்பவர் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இறந்த அந்த பாட்டிக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளார் பாடகர் அறிவு.

மேலும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் தயாரித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். இதேபோல பாடகி தீ பாடிய ரவுடி பேபி பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.