எதிர்நீச்சல் தொடர்கிறதில் குணசேகரன் பக்கம் பலத்த காற்று வீசி வருகிறது. அவர் நினைத்த மாதிரியே நடந்து வருகிறது, பிள்ளைகள் விஷயத்தில் உரிமை கோரக்கூடிய ஈஸ்வரியை கோமாவிற்கு அனுப்பி விட்டார். இனிமேல் அப்பாவை தவிர யாருக்கும் குழந்தைகளைப் பற்றிய முடிவெடுப்பது செல்லாது.
இதனால் குணசேகரின் ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கிறது. வருகிற தடைகளை எல்லாம் உடைத்தெருகிறார். என்னதான் வீட்டுப் பெண்கள் ஆர்ப்பரித்தாலும் அவர்களுக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடப்பதாக தெரியவில்லை. பண பலமும், அதிகார பலமும் வைத்து ஆடுகிறார் குணசேகரன்.
தற்போது அவர்களுக்கு ஜனனி தான் பெரிய தலைவலியாக இருக்கிறார். அவர் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என குணசேகரன் தரப்பு அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. ஜனனி இல்லை என்றால் வீடு அமைதியாக இருக்கும். அவரவர் மனைவிகளும் அடங்கி கிடப்பார்கள் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.
குணசேகரின் ஆட்டம் எல்லை மீறி போகவே ஒரு கட்டத்திற்கு மேல், அரிவாலை தூக்குகிறார் ஜனனி. இனிமேல் இந்த பொண்ணு நம் வீட்டிற்கு ஒத்து வர மாட்டாள் என முடிவெடுத்து சக்திக்கு வேறு ஒரு திருமணம் செய்யப் திட்டம் போடுகிறார். இந்த வீட்டில் இரண்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என கதிரிடம் கூறுகிறார்.
மகன் தர்ஷனுக்கு செய்யும் கல்யாண ஏற்பாடோடு சக்திக்கும் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். சக்தியின் இரண்டாவது திருமணத்திற்கு அவர் மனதில் இருக்கும் பெண் அறிவுக்கரசி. ஏற்கனவே அறிவு, மாமா மாமாவென்று ஒரு கெமிஸ்ட்ரியை உண்டாக்கி வருகிறார்