எதிர்நீச்சல் சைக்கோவிற்கு கை கொடுக்கும் முரட்டு பீஸ்.. முக்கோண டார்ச்சரால் முழிக்கும் மருமகள்கள்

சைக்கோ தனத்தின் உச்சத்தை தொடுகிறார்கள் குணசேகரன். தான் டார்ச்சர் கொடுத்தால் மட்டும் போதாது, தன்னுடைய அம்மா விசாலாட்சியையும் பழையபடி மருமகள்களை ஆட்டிப்படைக்க தூண்டுகிறார். அவரை வைத்து புது ரூட்டில் டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

பாசத்தை ஒரு ஆயுதமாக வைத்து உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார் விசாலாட்சி. உடம்பு சரியில்லாததை ஒரு காரணமாக வைத்துக் கொண்டுவீட்டு மருமகள்களை கண்டபடி வேலை வாங்கி அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக நிற்கிறார் விசாலாட்சி.

மொத்த பிளானையும் போட்டுக் கொடுத்தது குணசேகரன் தான். அவர்தான் தாயார் விசாலாட்சி இடம் பழையபடி அவர்களை அடுப்பாங்கறையில் அடைத்து ஆள வேண்டும் என கூறுகிறார். அவர்கள் வேலை நமக்கு சமைத்து போடுவதும், வீட்டு வேலைகளை பார்ப்பது மட்டுமே என ஆணாதிக்கம் செலுத்துகிறார்.

குணசேகரன் பேச்சை கேட்டு விசாலாட்சி அம்மையார் வீட்டு மருமகள்கள் முன்னேறுவதற்கு தடையாய் இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் இப்படி என்றால் ஈஸ்வரியின் மகன் தர்ஷன் வேறு ஒரு விதமாய் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். இப்படி முக்கோண டார்ச்சரில் வீட்டுப் பெண்களின் முன்னேற்றம் தடை படுகிறது.

தர்ஷன் நடிப்பது தெரியாமல், “அம்மா பாசத்தில்” ஈஸ்வரி செய்வதறியாது நிற்கிறார். ஒரு பக்கம் தர்ஷினி நீங்கள் ஏன் இந்த வீட்டில் இருக்கிறீர்கள், வெளியில் சென்று உங்கள் திறமையை நிரூபித்து முன்னேறுங்கள் என அம்மா மற்றும் சித்திக்கு அறிவுரை கூறியும் அவர்கள் குடும்பப் பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கிறார்கள்.