எதிர்நீச்சல் 2 பார்க்கும் ரசிகர்களுக்கு வெறியை தூண்டுகிறது. நாளுக்கு நாள் குணசேகரனின் ஆளுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.குணசேகரனின்மொத்த குடிமியும் மருமகள்களின் கையில் இருந்தும் அவர்கள் பயந்து நடுங்குகிறார்கள.
ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தூக்கி பொசுக்கி போடுவேன் என குணசேகரன் மருமகளை பயமுறுத்தி சைக்கோ தனத்தை காட்டுகிறார். அவரின் வலதுகரமான ஜான்சி ராணியை வைத்து அவர்களை துன்புறுத்துகிறார். அண்ணன் என் பக்கம் என ஜான்சி ராணியும் அவர்களை அடக்க முயற்சிக்கிறார்.
அப்பத்தா இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது. வீட்டுப் பெண்கள் நினைத்தால் பரோலில் வந்த குணசேகரனை எளிதில் ஜெயிலுக்கு அனுப்பி விடலாம் ஆனால் அதை கூட செய்யாமல் சீரியலை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் ஜீவானந்தத்திடம் இருக்கிறது.
மறுபக்கம் பார்கவியின் தந்தை பயந்து நடுங்குகிறார். இப்படி பயப்படும் ஒரு ஜென்மத்தை எங்கே இருந்து ஜீவானந்தம் அழைத்து வந்தார் என்று தெரியவில்லை சற்று ஓவர் நடிப்பாக இருக்கிறது .கொடைக்கானலில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தர்ஷன்னும், பார்கவியும் சந்தித்து கொள்ளவில்லை.
இப்படி நாடகத்தில் ஹைப் ஏற்றுகிறேன் என்ற பெயரில் மொத்தமாய் எரிச்சல் அடைய செய்கிறார் ஜீவானந்தம். எப்பொழுதுமே எதிர்நீச்சலில், பிரச்சனைகள் தான் மேலோங்கி இருக்கிறது. டைட்டில் மட்டும் எதிர்நீச்சல் என்று வைத்துள்ளார்களே தவிர அந்த நாடகத்தில் யாரும் எதிர்நீச்சல் போடுவதாக தெரியவில்லை.