என்னதான் படம் நல்லா இருந்தாலும் மார்க்கெட்ல விலை போகல.. மனக்கசப்பால் சறுக்கி விழுந்த சசிகுமார்.!

மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சசிகுமாரின் ‘அயோத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக அக்கறை கொண்ட கண்ணோட்டத்தோடு படங்களை நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு என்னதான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவருடைய படங்கள் மார்க்கெட்டில் விலை போவதில்லை.

ஆனால் மனிதத்தை போற்றும் அயோத்தி படம் ரிலீஸ் ஆனது யாருக்கும் தெரியாது. வெளிவந்ததையும் யாரோ ஒருவர் சொல்லி தான் தெரிகிறது. இதனால் அந்த படத்திற்கு வசூல் ரீதியாக வெற்றி இல்லை. இந்த படத்தை விளம்பரப்படுத்த தவறியதால் மக்களிடம் ரீச் ஆகவில்லை.  

இது தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை. ஆனால் சசிகுமார் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அப்படி இருக்கையில் ஒரு படத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விவரம் அவருக்கு தெரியும். இதை சசிகுமார் கொஞ்சமாவது பயன்படுத்தி இருக்கலாம்.

அவர் இதை செய்யாமல் அமைதி காத்து வருகிறார். படம் நடித்து முடித்து விட்டோம் அதோடு கடமை முடிந்து விட்டது என ஒதுங்கிக் கொள்கிறார். இன்று வரை அந்த படத்தை பற்றி பெரிய  ப்ரோமோஷன் கூட கொடுக்கவில்லை. ஏன் சசிகுமார் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை.

அதனால் படம் நன்றாக இருந்தும் மார்க்கெட்டில் விலை போகாத படமாக இருக்கிறது. இந்த படம் மக்களும் நன்றாக சேர்ந்து இருந்தால் வசூல் வந்திருக்கும் சசிகுமாரின் பெயர் பழைய நிலையில் உயர்ந்திருக்கும்.

அதை செய்யாமல், நல்ல கதை கொண்ட படத்தில் நடித்தாலும் வெற்றி பெற முடியவில்லை என அடுத்தடுத்து சறுக்கல்களை நினைத்து பெரும் மனக்கசப்பில் சசிகுமார் இருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே வழி அவருடைய படங்களை சரியான வகையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான்.